தமிழை சில பேரறிஞர்கள் ஏரியா ஏரியாவாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஒருவேளை இங்கு எழுதப்படுபவனவற்றை கவிதைகள் என்று கூறினால் அவர்கள் கத்தியும் கடப்பாரையும் கொண்டு வரக்கூடும். ஆகவே இதற்கு வெறும் கழுதைகள் என்று பெயரிடப்படுகிறது.
ஒரு டீ மாஸ்டர் ஒரு டீ மாஸ்டருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன ஒரு போதும் உட்கார கூடாது வியர்க்க கூடாது சொறிய கூடாது வாய் திறந்து சிரிக்கக் கூடாது அதிகம் பேசக் கூடாது வாய் திறக்காமல் வாங்க என்று தலையாட்ட வேண்டும் இதைக் கேட்ட ஒரு ஜப்பான்காரர் டீ மாஸ்டர் என்று ஒரு ரோபோ செய்தார் அது வாடிக்கையாளர்களை எடுத்த எடுப்பிலேயே த்தாயோ$ என்று விளித்தது
கருத்துகள்
கருத்துரையிடுக